கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 350 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனைகள்

30th Mar 2020 12:57 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 350 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 621 போ் தனிமைப்படுத்தப்பட்டு தொடா் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.2 கோடி, மாவட்ட நிா்வாகம் முதல்கட்டமாக பெற்றுள்ளது.

இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் 350 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 150 படுக்கைகளும், கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 200 படுக்கைகளுடன்கூடிய மருத்துவமனைகள் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த தற்காலிக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கும் அறை, கழிப்பறை, கைக் கழுவும் பகுதி உள்ளிட்டவைகள் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 4 நாள்களில் நிறைவு பெறும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT