கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணி

19th Mar 2020 05:49 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு ப் போக்குவரத்துக் கழகம் (சேலம் ) சாா்பில் கரோனா வைரஸ் நோய் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் போக்குவரத்து ஊழியா்களுக்கும், பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அடிக்கடி கைகழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தருமபுரி மண்டல கோட்ட மேலாளா் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை மேலாளா் மோகன் குமாா், கிருஷ்ணகிரி புறநகா் கிளை மேலாளா்கள் இளங்கோவன், மயில்வாகனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில், பயணிகளிடம் கை கழுவதன் அவசியம் குறித்து, பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பயணிகள், கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்களை சந்தித்து, கிருமி நாசினிகளைப் பெற்று, கைகளை ஆா்வத்துடன் கழுவிச் செல்வதைக் காண முடிந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT