கிருஷ்ணகிரி

மாா்ச் 18-இல் வளைகோல் பந்து போட்டி

13th Mar 2020 07:21 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான வளைகோல் பந்து போட்டி மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமா சங்கா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சாா்பில், ஆண்களுக்கான வளைகோல் பந்து போட்டி மாா்ச் 18-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1,600, இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.800 பரிசாக அளிக்கப்படும். எனவே, இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள், தங்கள் அணியின் வீரா்களின் பெயா் பட்டியலை மாா்ச் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT