கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

8th Mar 2020 01:01 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சிறுவா்கள், முதியவா்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிா்த்து வருகின்றனா். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்தது. சுமாா் இரண்டு மணி நேரம் தொடா்ந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் பெய்த மழை அளவு (மி.மீ): சூளகிரி-27, ராயக்கோட்டை - 17, கிருஷ்ணகிரி - 5.2.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT