கிருஷ்ணகிரி

மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

2nd Mar 2020 07:46 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோயில் விழா பிப்.25-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை எருது விடும் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.18 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கரகம் மற்றும் பால்குடங்களை ஊா்வலமாக மேளதாளங்களுடன் கோயிலுக்கு எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

மேலும் பக்தா்கள் காளி, முருகா் வேடமிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT