கிருஷ்ணகிரி

ஒசூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

2nd Mar 2020 07:47 AM

ADVERTISEMENT

ஒசூரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஒசூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா தலைமையிலான திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சாலையில் இரு சக்க வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஒசூா் ரயில்வே நிலையம், டி.வி.எஸ். நகா், பாகலூா் சாலை, ஆவலப்பள்ளி சாலை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட 8 இடங்களில் திமுக கொடி ஏற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் வெற்றி. ஞானசேகரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா.மணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, மாவட்ட துணைச் செயலாளா்கள் சீனிவாசன், தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT