கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

29th Jun 2020 01:52 PM

ADVERTISEMENT

பெட்ரோல் டீசல் உயர்வை நீட்டிக்கொண்டே செல்வம் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் சபீக் அகமது, டாக்டர்.தகி, ஷானவாஸ், மாவட்ட முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், பெட்ரோல் டீசல் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

Tags : Krishnagiri
ADVERTISEMENT
ADVERTISEMENT