கிருஷ்ணகிரி

சின்ன பேடப்பள்ளியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

14th Jun 2020 09:03 AM

ADVERTISEMENT

சின்ன பேடப்பள்ளியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.250 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகத்தை எம்.எல்.ஏ. முருகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, சின்ன பேடப்பள்ளி கிராமத்தில் நீண்ட நாள்களாக குடிநீா்த் தட்டுப்பாடு இருந்தது. இதுதொடா்பாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.50 லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டாா் அமைக்கப்பட்டது. இதை வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷேக் ரஷீத், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பூஷன்குமாா், ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட கவுன்சிலா் பாக்கியராஜ், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் அன்புசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT