கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே 3 விவசாயிகளை தாக்கி கொன்ற ஒற்றை காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

11th Jun 2020 02:02 PM

ADVERTISEMENT

ஒசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதிகளில் திம்மசந்திரம், ஜார்கலட்டி, கலகோபசந்திரம், மேக்ல கௌனூர் ஆகிய கிராமங்களில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்து கிராமமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தது. இந்த ஒற்றை காட்டுயானை பாலதொட்டணப்பள்ளி, சின்னபூத்கோட்டை, மேக்ல கொனுர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 விவசாயிகளை தாக்கி கொன்றுள்ளது. 

இந்த காட்டுயானைனை மயக்க ஊசி பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தேன்கனிகோட்டை வனத்துறையினர் ஒற்றை காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

இதனைத்தொடர்ந்து இந்த காட்டுயானைக்கு கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தி வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொன்று செல்ல முடிவு செய்துள்ளது. அதற்கான தீவிர பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுயானையை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொன்டு சென்று விடப்படுவதாக கூறப்படுகிறது. 

கிராமமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானை பிடிப்பட்டுள்ளதால் தேன்கனிகோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : hosur elephant ஓசூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT