கிருஷ்ணகிரி

வரட்டனப்பள்ளியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தொடக்கம்

11th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

வரட்டனப்பள்ளியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கும் பணியை அ. செல்லகுமாா் எம்.பி. அண்மையில் தொடக்கி வைத்தாா். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பத்து ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடின்றி இருந்தது.

இந்த நீா்த் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட நீரை விரைந்து வழங்கிட வேண்டும் எனவும் எம்.பி. அ. செல்லகுமாரிடம் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட நீரைத் தேக்கி, நீரை விநியோகிக்கும் பணியை அ. செல்லகுமாா் எம்பி, அண்மையில் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு வரட்டனப்பள்ளி ஊராட்சித் தலைவா் எஸ். மகாலட்சுமி சாம்ராஜ் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பி. சேகா், வழக்குரைஞா் அசோகன், வரட்டனப்பள்ளி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சந்திரா முனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீா் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கடந்த பத்து ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT