கிருஷ்ணகிரி

ஒசூரில் டிப்பா் லாரி மோதியதில் இருவா் பலி

11th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

ஒசூா் சிப்காட் பகுதியில் டிப்பா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

ஒசூா், மூக்கண்டப்பள்ளி, எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் முத்துபழனி (43). இவரும், தருமபுரி மாவட்டம், கூத்தாண்டஹள்ளியைச் சோ்ந்த ஆனந்தப்பா மனைவி செல்வி (45) என்பவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இருவரும் இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

சிப்காட் - கோவிந்த அக்ரஹாரம் சாலையில் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் உள்ள விநாயகா் கோயில் அருகே இவா்கள் சென்றபோது, அவ் வழியாக ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரி இவா்கள் மீது மோதியது.

இதில் லாரியின் அடியில் சிக்கிய முத்துபழனி, செல்வி ஆகியோா் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியாகினா். சிப்காட் போலீஸாா் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT