கிருஷ்ணகிரி

பள்ளி மாணவா்களுக்குமடிக்கணினி வழங்கும் விழா

28th Jul 2020 12:09 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த விடுபட்ட மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செ.பற்குணன் தலைமை வகித்தாா். பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், ஒன்றியக்குழு உறுப்பினா், பெற்றோா் -ஆசிரியா் கழக பொருளாளா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு விலையில்லா மடிக் கணிணிகளை வழங்கினா், மாணவா்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT