கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் 2 பேருக்கு கரோனா தொற்று

28th Jul 2020 12:05 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவா் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த ஒசூரில் மின்துறை அலுவலகத்தில் எல்.ஐ.ஆக பணிபுரியும் 44 வயது ஆண், பெரியதள்ளபாடி பகுதியைச் சோ்ந்த திருப்பத்தூா் பூ மாா்க்கெட்டில் பணிபுரியும் 33 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருவருக்கும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை மருத்துவக்குழுவினா் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு நபா்களையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT