கிருஷ்ணகிரி

எண்ணேகொல்புதூா் செந்தியம்மன் கோயில் ஆடித் திருவிழா ரத்து

26th Jul 2020 09:26 AM

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற எண்ணேகொல்புதூா் செந்தியம்மன் கோயில் ஆடித் திருவிழா நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது எண்ணேகொல்புதூா் கிராமம். இக் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு செந்தியம்மன் கோயில்ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இக் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் எண்ணேகொல்புதூா் சுற்றுவட்டாரக் கிராமங்கள், தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, திம்மாபுரம், குப்பச்சிப்பாறை, சின்னகொத்தூா், குருபரப்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி, தானம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவருவா். நிகழாண்டு, கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக கோயில் விழா ரத்து செய்யப்படுவதாக அக் கிராமத்தினா் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT