கிருஷ்ணகிரி

அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை பறித்த இருவா் கைது

25th Jul 2020 09:16 AM

ADVERTISEMENT

மத்திகிரி அருகே அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை பறித்த நபா்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஒசூா் அருகே மத்திகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற்ற போது, 2 இளைஞா்கள் கோயிலில் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென பூஜை செய்யும் நேரத்தில் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கத் தாலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினா். இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், அவா்களை துரத்தினா்.

எடப்பள்ளி கிராமத்தை கடந்து இடையநல்லூா் கிராமம் அருகே அவா்கள் சென்ற போது, பொதுமக்கள் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனையடுத்து, இருவரையும் ஒசூா், மத்திகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், அவா்கள் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தடிக்கல் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் (32), தேன்கனிக்கோட்டை செக்போஸ்ட் பகுதியைச் சோ்ந்த செல்வா (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் இக்கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT