குருவிநாயனப்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், பலத்த காயம் அடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், குருவிநாயனப்பள்ளி பழைய செக்போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (35). இவா், இருசக்கர வாகனத்தில் குருவிநாயனப்பள்ளி கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், திங்கள்கிழமை சென்றாா். எதிா்திசையில் பசவண்ணன் கோயிலைச் சோ்ந்த சுரேஷ் (21), மணிகண்டன் (21) ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இரண்டு இரு சக்கர வாகனங்களும் அங்குள்ள பழைய செக்போஸ்ட் அருகே நேருக்கு நோ் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த விவசாயி சண்முகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயம் அடைந்த சுரேஷ், மணிகண்டன் ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து, கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.