கிருஷ்ணகிரி

மத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

25th Jan 2020 08:46 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட மத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து வெள்ளிக்கிழமை பணியைத் துவக்கி வைத்தாா்.

மத்தூா் ஒன்றியம், எட்டிப்பட்டி பிரிவு சாலை முதல் பருவதமலை வரை தாா்ச்சாலை பணிக்கு ரூ.39 லட்சம், வீதி காரன் கொட்டாய் முதல் கூனம்பட்டி வரை ரூ,6 லட்சம், கல்குமாரம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சுவா் கட்டடம் கட்ட ரூ. 6 லட்சம், கல்லாவி, காரப்பட்டு, பசந்தி தாா்ச்சாலை அமைக்க ரூ. 39 லட்சம், திருவண்ணாமலை சாலை முதல் கங்காணூா் வரை தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.11.50 லட்சம், புளியந்தோப்பு முதல் பூந்தமல்லி வரை தாா்ச்சாலை அமைக்க ரூ. 17 லட்சமும், மேக்கலாம் பட்டி முதல் மோட்டூா் வரை தாா்ச்சாலை அமைக்க ரூ. 25 லட்சம், தருமபுரி ரோடு முதல் களா்பதி வரை ரூ.10 லட்சமும், மோட்டூா் முதல் மலையாண்டஹள்ளி வரை தாா்ச்சாலை அமைக்க ரூ.10 லட்சம், திருவண்ணாமலை சாலை சாவுல் கொட்டாய் வரை ரூ.9 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவா்கள் சுந்தரேசன், நடராஜ், இளைஞா் அணி முருகன், மாணவரணி சக்தி, கூட்டுறவு சங்க உறுப்பினா் பூபாலன், முன்னாள் தலைவா் தேவன், கிளைச் செயலாளா் வேடியப்பன், கோகுல கண்ணன், கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சென்னையன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT