சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சங்கடஹர சதுத்தியையையொட்டி, கிருஷ்ணகிரி கிளைச் சிறை சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில், 555 லிட்டா் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் சுவாமிக்கு நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.