கிருஷ்ணகிரி

துப்புரவுப் பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

8th Jan 2020 07:40 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தேசிய திறன் மேம்பாட்டு மையம், ஒசூா் மாநகராட்சி, கோவை நோ்டு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை செவ்வாய்க்கிழமை (ஜன.7) தொடங்கி 5 நாள்கள் நடத்துகின்றன. இதில் மரபுசார எரிசக்தி ஊரக வளா்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் காமராஜ் பயிற்சி அளித்தாா்.

இந்தப் பயிற்சியில் தூய்மையான பாரதத்தை உருவாக்குவது, வெவ்வேறு வகையான கழிவுகளை கையாளுவது, குப்பைகளை தரம் பிரித்தல், சாக்கடை அடைப்புகளை தானியங்கி இயந்திரம் மூலம் சரிசெய்து போன்று பயிற்சி வழங்கப்படுகிறது. ஒசூா் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT