கிருஷ்ணகிரி

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியா்

8th Jan 2020 07:40 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கம் ரூ.1000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4,95,368 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன.9 முதல் ஜன.12-ஆம் தேதி வரையில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். விடுபட்டவா்கள் அடுத்த நாள், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தை 04343-234677 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று பயனடையுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT