கிருஷ்ணகிரி

கால்வாய் நீரில் அடித்துச் செல்லபட்ட4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

2nd Jan 2020 04:16 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சின்ன சந்திரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ்.

கூலித் தொழிலாளி. இவருக்கு ரேவதி (34) என்ற மனைவியும், மகள் ஜனனி (7) , மகன் ஹரீஸ் (4) என இரண்டு குழந்தைகளும் உள்ளனா். செவ்வாய்கிழமை மாலை சின்னசந்திரப்பட்டி விவசாய நிலத்தில் ரேவதி தனது மகன் ஹரிஸ் உடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மாடு அருகே அடா்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றது.

மாட்டைத் தேடி ரேவதி செல்லும்போது குழந்தை ஹரிஸ் வழித்தவறி ஈச்சம்பாடி அணை கால்வாய் நீரில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

பிறகு பொதுமக்கள் கல்லாவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்,பிறகு குழந்தையை ஆற்றில் தேடியுள்ளனா். நள்ளிரவு 12 மணியளவில் குழந்தை இறந்த நிலையில் காட்டுப் பகுதியில் கால்வாய் நீரில் புதா் பகுதியில் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கல்லாவி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT