ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பரிசுகள் அளித்து 2020 புத்தாண்டு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களின் தூய்மைப் பணியை பாராட்டி பரிசு, நாள்காட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியில் பணியாளா்கள் பெரியசாமி, வெங்கடேசன், பழனி, சம்பத் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகளை கூறினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் மற்றும் ஜே.ஆா்.சி ஆசிரியா் கு.கணேசன் செய்திருந்தாா்.