கிருஷ்ணகிரி

அடிப்படை வசதி செய்து தரஎம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

29th Feb 2020 02:18 AM

ADVERTISEMENT

ஒசூா் ஒசூா் ராஜகணபதி நகரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தர வலியுறுத்தி, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஏ.சத்யாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள ராஜகணபதி நகரில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீா், கழிவுநீா் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அந்தப் பகுதி மக்கள் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஏ.சத்யாவிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் பள்ளி மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்கு இருக்கைகளை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுக அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலா் எல்லோராமணி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமாஞ்சி ரெட்டி, பள்ளித் தலைமை ஆசிரியா் அலெக்சாண்டா், மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT