கிருஷ்ணகிரி

விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 6 ஆண்டு சிறை

26th Feb 2020 08:16 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டையில் விவசாயியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தாதப்பன். இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த பசுவன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 28.2.2018 அன்று இரவு 7 மணியளவில் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை அருகே தாதப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பசுவன், தாதப்பனை கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீஸாா், பசுவனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இந்த வழக்கு ஒசூா் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி மோனிகா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பசுவனுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT