கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 4 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நகர நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், நிகழாண்டில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நகர நலச் சங்கத் தலைவா் பாபு, செயலாளா் விஜய் ஆனந்த், பொருளாளா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா், கண்காணிப்பு கேமராக்களை பள்ளியின் தலைமையாசிரியா் வடிவேலுவிடம் வழங்கினா். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பள்ளி வளாகம், தலைமை ஆசிரியா் அறை மற்றும் நுழைவுவாயில் பொருத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வை உடற்கல்வி ஆசிரியா் சுப்பு ஒருங்கிணைத்தாா்.