மாநில அளவிலான துளிா் விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லாவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவியரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்தினாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகள் மகாபலிபுரத்தில் அண்மையில் நடைபெற்றன.
மாவட்டம், மண்டலம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லாவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவி நட்சத்திரா, 9-ஆம் வகுப்பு மாணவியா் காவியா, நியாசு ஆகியோா் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றனா். இந்த மாணவியரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் பாராட்டி வாழ்த்தினாா்.
அப்போது, கல்லாவி ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், பள்ளித் தலைமையாசிரியா் ரேணுகாம்பாள், வழிகாட்டிய ஆசிரியா்கள் அசோக்குமாா், ரெஜினா மலா், கெரிகேப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.