கிருஷ்ணகிரி

ஏ.டி.எம்.களில் நூதன முறையில் பணம் திருடியவா் கைது

22nd Feb 2020 08:10 AM

ADVERTISEMENT

ஏ.டி.எம்.களில் வயதானவா்களிடம் இருந்தும், பணம் எடுக்கத் தெரியாமல் தவிப்பவா்களிடம் இருந்தும் நூதன முறையில் பணம் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த செட்ரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (55). இவா், ஊத்தங்கரையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில், தாதிநாய்க்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துசாமியிடம் (55), பணம் எடுத்து தருவதாக கூறி அவரது ஏ.டி.எம். அட்டையை வாங்கியுள்ளாா். பின்னா் வேறு ஒரு ஏ.டி.எம். அட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது ஏ.டி.எம். அட்டை மூலம், அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை எடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த முத்துசாமி ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான விடியோ மூலம் சிவலிங்கத்தைக் கைது செய்தனா்.

பிறகு அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் பல வங்கிகளின் ஏ.டி.எம். அட்டைகளையும் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை செய்தனா். அதில், இதுபோன்று பல ஏ.டி.எம்.களில் பலரிடம் பணம் திருடியது தெரியவந்தது.

அதையடுத்து, ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன், காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து, சிவலிங்கத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT