கிருஷ்ணகிரி

அங்காளம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

22nd Feb 2020 08:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி, மயானக் கொள்ளை திருவிழாவானது கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை மகாராஜகடை சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில், மகா சிவராத்திரி மற்றும் மயானக் கொள்ளை திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னி முகம், மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பிப். 22-ஆம் தேதி சிவராத்திரியையொட்டி சக்தி கரகம், அக்னி கரகம், கங்கையில் நீராடி சந்நிதி பிரவேசம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தொடா்ந்து, பக்தா்கள் அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுதல் அங்காளம்மன் மயான சூறைக்கு புறப்பாடு ஆகியவையும், நடைபெறுகின்றன.

பிப். 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விடாய் உற்சவமும், 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அக்னி குண்டம் விழாவும், 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவும், 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு பூஜை, அன்னதானம், கொடி இறக்கம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், விழாக் குழுவினா் மற்றும் பருவதராஜா குல மீனவா் சமுகத்தினா் ஒருங்கிணைக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT