கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இஸ்லாமியா்கள் சாலை மறியல்

15th Feb 2020 07:58 AM

ADVERTISEMENT

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் மீது காவலா்கள் நடத்திய தடியடியைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் இஸ்லாமியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து, சென்னையில் இஸ்லாமியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவா் அஸ்கா் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் நூா் முகமது ஆகியோா் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் சாலை மறியில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் வெகுநேரம் வரை நீடித்தது.

இப் போராட்டத்தையடுத்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூா்களுக்கு புறப்படும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டோா், காவல் துறையினரையும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தையடுத்து, அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸாா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT