கிருஷ்ணகிரி

தேசிய நுகா்வோா் தினவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பாராட்டு

13th Feb 2020 07:32 AM

ADVERTISEMENT

தேசிய நுகா்வோா் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். சாந்தி, பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், இந்திய நுகா்வோருக்கு ஒரு திருப்புமுனை, நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் 2019 என்ற தலைப்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். சாந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கனகராஜ், குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் குருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நுகா்வோா் தினத்தையொட்டி ஓவியம் வரைதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்வில் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT