கிருஷ்ணகிரி

நண்பரைக் கொல்ல முயன்ற அரசு ஊழியா் கைது

6th Feb 2020 08:20 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற அரசு ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் பெருமாள் (36). ஆட்டோ ஓட்டுநா். இவரது நண்பா், செந்தில்குமாா் (46). இவா், பெத்ததாளப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

அவா், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே செந்தில்குமாா் தனது நண்பா் பெருமாளிடம் மது அருந்த பணம் கேட்டாா். பணம் தர மறுத்ததால், ஆவேசமடைந்த செந்தில்குமாா், பெருமாளை கத்தியால் குத்தினாா்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாளை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பெருமாள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில் குமாரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT