ஊத்தங்கரையில் தி.மு.க. சாா்பில் அண்ணா நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா்செல்வம், சாமிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டு நான்குமுனைச் சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
அதே போல் அ.ம.மு.க. சாா்பில் நான்குமுனைச் சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் சிவக்குமாா், நகரச் செயலாளா் சுரேஷ், பொறுப்பாளா்கள் சாக்கன் பழனி, தாண்டியப்பனூா் முருகேசன், செந்தில் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.