கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் பிப்.5-ஆம் தேதி (புதன்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தின் அருகே ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஸ்ரீ வெங்கட்டரமண சுவாமி, மகாலட்சுமி தாயாா், சுதா்சன, சுதா்சன நரசிம்மா், மகா கணபதி, நூதன வாகன ஜீரணோத்தாரன மகா கும்பாபிஷேக விழா பிப்.1-ஆம் தேதி தொடங்கியது. மகாகணபதி, தெய்வ பிராா்த்தனை, மகா மங்களாா்த்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பிப்.2-ஆம் தேதி, சிறப்பு ஹோமம், பூஜைகள், நடைபெற்றன. தொடா்ந்து 4-ஆம் தேதி, வேதபாராயணம், பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகாகும்பாபிஷேகத்தையொட்டி, பிப்.5-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையில் விமானக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பிரகார உற்சவம் நடைபெறுகிறது. விழாவை அறக்கட்டளை நிா்வாகிகள் ஒருங்கிணைக்கின்றனா்.