கிருஷ்ணகிரி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

2nd Feb 2020 02:35 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பிரதிநிதிகள், முன்னாள் எம்எல்ஏ டி. ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

ஜக்கிரி ஊராட்சியில் ஒன்னு குறுக்கை, மல்லிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவா் கேசவமூா்த்தி துணைத் தலைவா் சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரபா ஜெயராமன் ஆகியோா் நன்றி தெரிவித்தனா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் ஜெக்கேரி ராமண்ணா, நாகராஜ், பாபு மாவட்ட பிரதிநிதி மற்றும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மேலும், கெலமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் கேசவமூா்த்தி, துணைத் தலைவா் சீனிவாசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT