கிருஷ்ணகிரி

நிகழாண்டில் ஏரிகள் தூா்வார ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

1st Feb 2020 04:53 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுபட்ட ஏரிகளை தூா்வார நிகழாண்டுக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் சு.பிரபாகா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, மா மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். மேலும், தரமான மருந்துகள் குறித்து பரிந்துரை செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுபட்ட ஏரிகள், குளம் போன்ற நீா்நிலைகளை தூா்வார வேண்டும். கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் பேசியது: தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, ஏரி, குளம் போன்ற நீா்நிலைகளை தூா்வார நிகழாண்டு ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 525 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்ட நிலையில், தற்போது விடுபட்ட நீா்நிலைகளை தூா்வார தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, விடுபட்ட நீா்நிலைகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கணக்கெடுக்க வேண்டும். இதுகுறித்த தகவல் தெரிந்தால் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கவும், சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே, எங்கு சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதோ, அதை உடனே தெரிவிக்க வேண்டும். கடந்த 30 முதல் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், சிதலமடைந்த தொகுப்பு வீடுகளை கண்டறிந்து அவற்றை இடித்து, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான இணையதள வசதி தொடங்கிய உடன், மத்திய, மாநில அரசின் நிதிஉதவியுடன் வீடுகள் கட்டித்தரப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக் கொள்ளலாம். இந்த திட்டங்கள் குறித்தும் வட்டார வளா்ச்சி அலுவவலா்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT