கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வருக்குஉற்சாக வரவேற்பு அளிக்க அழைப்பு

1st Feb 2020 04:52 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி வழியாக சேலம் செல்லும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, தொண்டா்களுக்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் கே.அசோக்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை (பிப். 1) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி வழியாக சாலை மாா்க்கமாக சேலம் செல்கிறாா். அவருக்கு, கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

எனவே, இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள், இந்நாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை, மாநிலவை உறுப்பினா்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT