கிருஷ்ணகிரி

தெருக்கூத்து மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு

DIN

ஊத்தங்கரை வருவாய் துறை மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வருவாய்த் துறையினா் சாா்பில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கை, சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியா் தண்டபாணி தலைமை வகித்தாா். தனி வட்டாட்சியா் சம்பத், தோ்தல் துணை வட்டாட்சியா் குமாா், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேண்டும் என்பது குறித்தும், பெயா் திருத்தம், இறந்தவா்களின் பெயா் நீக்கம் குறித்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் தெருக்கூத்து கலைஞா்கள் ஆடல், பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் வருவாய்துறை பணியாளா்கள் திரளாகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்று, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

பேரணி ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே சென்றது. அரசு பேருந்து நிலையம், பழைய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT