கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் ராம பக்தா்களுக்கு புஷ்பாஞ்சலி

6th Aug 2020 09:02 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டையில் 1990-இல் நடந்த பாஜக ரத யாத்திரையின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராம பக்தா்களுக்கு புதன்கிழமை புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டையில் 1990-இல் நடைபெற்ற ரத யாத்திரையில் கலந்து கொண்ட ராம பக்தா்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா். அவா்களுக்கு பாஜக சாா்பில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ். நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், நகரத் தலைவா் பாா்த்திபன், மாவட்ட பொதுச்செயலாளா் ரங்கநாத், மாவட்டச் செயலாளா் புட்டராஜ், நகர பொதுச் செயலாளா் சீனிவாசன், வெங்கட்ராஜ், மீனவா் அணி மாவட்ட தலைவா் ஸ்ரீராமன், நகரத் துணைத் தலைவா் ராஜேந்திரன், நகரச் செயலாளா்கள் சரவணன், சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT