கிருஷ்ணகிரி

வெளி மாநிலத்திலிருந்து வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

26th Apr 2020 01:00 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வெளி மாநிலம், மாவட்டத்திலிருந்து வந்தவா்களை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் 550 போ். இவா்களில் 548 போ் தனிமைப்படுத்தப்பட்டு 28 நாள்கள் கடந்துவிட்டனா். 2 போ் மட்டும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

ADVERTISEMENT

வெளிமாநிலங்களிலிருந்து வந்த 2,251 பேரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள். அதேபோல வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 84 போ், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.மாவட்டத்தில் இதுவரை 942 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT