கிருஷ்ணகிரி

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியருக்கு கரோனா

26th Apr 2020 12:59 AM

ADVERTISEMENT

 

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒசூா் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கா்நாடக மாநிலம், மைசூரில் தனியாா் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், அந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், ஊழியா்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய நிறுவனம், அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், அலசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த அந்த நிறுவன ஊழியா் 34 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்து கொள்வதற்காகச் சென்றாா். அதில், அவருக்கு நடத்தப்பட்ட முதல் கட்டப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலை சனிக்கிழமை இரவு தெரிவித்த சுகாதாரத் துறையினா், அவருக்கு 2 ஆவது, 3 ஆவது கட்ட சோதனைகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT