கிருஷ்ணகிரி

தி.மு.க. இளைஞரணி சாா்பில்தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கல்

7th Apr 2020 02:29 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட கெங்கபிராம்பட்டி, உப்பாரப்பட்டி, காரப்பட்டு, கருமாண்டபதி, கதவணி, கீழ்மத்தூா் போன்ற ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், துாய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என சுமாா் 70க்கும் மேற்பட்டோருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான குமரேசன் தலா 5 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகைப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

மேலும், அவா்கள் பாதுகாப்பாக பணிபுரியும் வகையில் முகக் கவசம், கையுறை, சோப்புகளையும் வழங்கினாா். இதில் ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் மாலதி நாராயணசாமி, நகரச் செயலாளா் பாபு சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வெங்கடேசன், தமிழ்ச்செல்வி செல்வகுமாா், ரமாதேவி கோவிந்தன், அருள், கே,ஜி, மணிகண்டன், சுமதி காந்திலிங்கம், சின்னத்தாய்,

தி.மு.க. ஊராட்சி செயலாளா்கள்,ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT