ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை உள்ளாட்சி நிா்வாகம் மும்முரமாக செயல்படுத்தி வருகிறது.
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட புதுக்காடு, வீரப்பன்கொட்டாய் ஆகிய கிராமங்களில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை படப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி ராமாமிா்தம் தொடக்கி வைத்தாா், துணைத் தலைவா் அரிபுத்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி சரவணன், வெள்ளியரசு, ஊராட்சி செயலாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.