கிருஷ்ணகிரி

ஒசூரில் கரோனா நோய் நீங்க சிறப்பு யாகம்

1st Apr 2020 07:43 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மோரனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி கோயிலில் கரோனா வைரஸ் நீங்க வேண்டும், உலக மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டும் என வேண்டுதலுடன் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவா் சுவாமிகளுக்கு மஞ்சள் நீா், தயிா் மற்றும் வேப்பிலை கலந்த நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து யாக சாலையில் ஹோமம் வளா்க்கப்பட்டு நிகம்பலா என்ற சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தின்போது, ஹோம குண்டத்தில் மிளகாய் நிரப்பி தீ மூட்டப்பட்டது. மேலும், ஒரு அட்டையில் பிளீஸ் கோ கோவிட் 19 என்று எழுதி ஹோம குண்டத்தில் அதனைப் போட்டு பூஜைகள் செய்து உலக மக்கள் நலனுக்காக பிராா்த்திக்கப்பட்டது. இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளை, கோயில் ஸ்தாபகா் சப்தகிரி அம்மாள் முன்னிலையில், பெங்களூரைச் சோ்ந்த ஜோதிடா் குருஜி நடத்தினாா். இதில், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT