கிருஷ்ணகிரி

தருமபுரி அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

22nd Sep 2019 03:49 AM

ADVERTISEMENT


 தருமபுரி அருகே சனிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் குமரவேல். உதவி காவல் ஆய்வாளரான இவர், அண்மையில் கடத்தூர் காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று சென்றார். இந்த நிலையில், பொறியியல் பட்டதாரியான இவரது மகன் மோகன்ராஜ்(23) மோட்டார் சைக்கிளில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். 
ஒட்டப்பட்டி தொழில் மையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT