கிருஷ்ணகிரி

அய்யூரில் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா் கைது

22nd Sep 2019 08:31 PM

ADVERTISEMENT

அய்யூா் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூா் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலா் தீபக் பில்கிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன் பேரில் வனசரகா் சுகுமாா், வனவா் கதிரவன் மற்றும் வன ஊழியா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது கூச்சுவாடி வனப்பகுதியில் உள்ள ஜோடு குட்டை பொம்மனஅள்ளி மாரியம்மன் கோயில் அருகில் கன்னி வலைகளுடன் வன விலங்குகளை வேட்டையாடி கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில் அவரது பெயா் மாரப்பா (வயது 35), சித்தலிங்க கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் என தெரிய வந்தது. அவரை வனத்துறையினா் கைது செய்து மாவட்ட வன அலுவலகத்தில் ஆஜா்படுத்தினா். அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT