கிருஷ்ணகிரி

புத்தகக் கண்காட்சி

13th Sep 2019 09:54 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், செப். 9 முதல் 12 வரை நான்கு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
 இக்கண்காட்சியை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவியரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், நல்ல நூல்களை தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்தினார்.
 இந்நிகழ்ச்சிக்கு, அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணக்குமார், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கண்காட்சியை மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT