கிருஷ்ணகிரி

"நெடுஞ்சாலை வழியாக எண்ணெய் குழாய் பதிக்க வேண்டும்'

7th Sep 2019 09:55 AM

ADVERTISEMENT

விளைநிலங்களில் குழாய் பதிப்பதைத் தவிர்த்து, நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டார மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேலு.தங்கராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் காமராஜ் வரவேற்று பேசினார். இதில் மாவட்டச் செயலர் ஆறுமுகம் சங்கக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் காவிரி ஆற்றின் உபரி நீரிரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். பாப்பாரப்பட்டியில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். வாரச் சந்தையில் வேளாண் பொருள்கள் மற்றும் கால்நடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூடுதல் சுங்க வரியை குறைக்க வேண்டும். பாப்பாரப்பட்டி சின்ன ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். கரிப்பள்ளம், கொல்லப்பட்டி, பெரியூர் தோட்டப்பள்ளம் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீரை வழங்கிடும் ஜெர்தலாவ் ஏரியின் கிளைக் கால்வாயினை தூர்வார வேண்டும். உயர்மின் கோபுரங்கள் அமைத்துள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை தர வேண்டும். வறட்சியால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர் மல்லையன்,அகில இந்திய விவசாய தொழிலாளர் அர்ச்சுணன், சிஜடியு தொழிற்சங்க நிர்வாகிகள் சண்முகம், மனோண்மணி, விவசாய  தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், செல்வராஜ், ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலர் சின்னசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். துணை செயலர் சண்முகம் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT