கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஸ்ரீமதி ராதாஷ்டமி

7th Sep 2019 09:55 AM

ADVERTISEMENT

ஸ்ரீமதி ராதாராணி அவதார நாள் திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரியில் ஸ்ரீமதி ராதாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தரங்க சக்தியான ஸ்ரீமதி ராதாராணியின் அவதார திருநாளையொட்டி, மங்களார்த்தி, நரசிம்ம ஆர்த்தி, துளசி ஆர்த்தி நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு பால், தேன், தயிர், நெய் போன்ற பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தி சொற்பொழிவும், மகா மங்களாரத்தியும் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT