கிருஷ்ணகிரி

வறட்சியால் காய்ந்துபோன ஆலமரத்தை அகற்றக் கோரிக்கை

4th Sep 2019 09:29 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு முருக்கன் ஏரிக்கரையில் வறட்சியால் காய்ந்துபோன ஆலமரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காரப்பட்டு முருக்கன் ஏரிக்கரையில் நீரின்றி வறட்சியால் காய்ந்து இருந்த ஆலமரத்தின் கிளை செவ்வாய்க்கிழமை முறிந்து விழுந்தது.
 இந்த மரம் சேலம் - வாணியம்பாடி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடும் வறட்சி காரணமாக இந்த மரத்தின் விழுதுகள் காய்ந்து அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த ஆலமரத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 இந்த நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்காண வாகனங்கள் சென்று வருகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆலமரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT