கிருஷ்ணகிரி

பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு குறித்து ஆலோசனை

4th Sep 2019 09:26 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் மரக் கன்றுகள் நடவு செய்வது குறித்து, தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில், நீர் மேலாண்மைத் திட்டம், நீர் மேலாண்மை அமைப்பது, பருவ மழை தொடங்குவதற்கு முன்பு, பள்ளிகளில் மரக் கன்றுகள் நடவு செய்வது குறித்து தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, தலைமை வகித்து பேசியது:
 நீர் மேலாண்மையால் வரும் சந்ததியினர் பயன்பெறும் வகையில், பெற்றோர்களிடம் நீர் மேலாண்மை குறித்து தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 நீர் மேலாண்மை குறித்து, மாவட்ட ஆட்சியர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி, முதல் கட்டமாக 6 ஆயிரம் மரக் கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்து, பராமரிக்க வேண்டும் என்றார். மேலும், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அவர் மரக் கன்றுகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொன்முடி, நரசிம்மன், ராஜேந்திரன், சரவணன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT